×

துணை ஜனாதிபதி அறிவுரை - தேவையற்ற பரிசோதனைகளை செய்ய நோயாளிகளுக்கு எழுதி தராதீர்கள்

புதுச்சேரி: மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தேவையற்ற பரிசோதனைகளை செய்யக்கோரி எழுதி தராதீர்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி 9வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவ கல்லூரி 9வது பட்டமளிப்பு  விழா ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு கலந்து கொண்டு, 466  மாணவர்களுக்கு பட்டங்களையும், துறை வாரியாக சிறந்து விளங்கியவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் வழங்கினார்.  பின்னர் வெங்கய்யா நாயுடு பேசியதாவது: இந்தியாவில் இன்னமும் கல்வி அறிவு இல்லாத நிலை, பெண் குழந்தைகளுக்கு  பாகுபாடு காட்டப்படும் நிலை இருக்கத்தான் செய்கிறது.  இதையெல்லாம் மாற்றி, அவர்களையும் கைதூக்கிவிடத்தான் அரசின் திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.

புற்றுநோயை  குணப்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்பாக ஆக்சிஜன் சிகிச்சை திட்டம் அறிமுகமாகியுள்ளது. ஆக்சிஜனை செலுத்தும்போது புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுவதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள்  அதிகமாக செய்யுங்கள். கண்டுபிடிப்பின் நோக்கம் என்பது பட்டம் பெறுவதற்காக இருக்கக்கூடாது. சமூகத்திற்கு பயனளிக்கக்கூடியாதாக இருக்கவேண்டும்.

 துணை குடியரசு தலைவர் என்ற வகையில்  இந்தியா முழுவதும் நான் சுற்றி வருகிறேன். அப்போது பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் ஒன்றைக்கூறிக்கொள்ள விரும்புகிறேன். மருத்துவர்கள் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தேவையற்ற பரிசோதனைகளை  மேற்கொள்ளுமாறு எழுதி தருதல் கூடாது.  தீர்க்கமான முடிவு  எடுத்து அதன்பிறகு பரிசோதனை செய்யச்சொல்லுங்கள், தேவையற்றதை  தவிர்க்கப்பாருங்கள். இயந்திரம் சொல்லும் முடிவுகளை விட நோயாளிகளிடம் அன்போடும், மனிதநேயத்தோடும் கேளுங்கள். வாழ்வியல் மாற்றத்தால்  மக்கள் தற்போது உடற்பயிற்சி  செய்வதில்லை.எனவே யோகா, உடற்பயிற்சி செய்யுங்கள். நம்முடைய இயற்கை,  கலாச்சாரம் ஆகியவற்றை நேசியுங்கள். உலகம்  முழுவதும் இன்னும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கவில்லை. பெரும்பாலானோருக்கு குறைந்த செலவில் உயர்சிகிச்சை கிடைப்பதில்லை.  இதனை உறுதி செய்யவே பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை நல்லமுறையில் பயன்படுத்தினால் இந்தியாவின் மருத்துவ சேவையில் புரட்சியை ஏற்படுத்தும். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற பிரதமரின் தாரக மந்திரங்களை செயல்படுத்துங்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vice President , Unnecessary examination, Vice President, Venkyyanayudu, Advice
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்